கடந்த 21 ஆம் திகதி உயிர்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 யாழ். நாவாந்துறை ஐந்து சந்திப்பகுதியில் வைத்து இன்றுகாலை குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், குறித்த பகுதியில்  சந்தேகத்திற்கிடமாக நடமாடியதால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்