மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­ல­யத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் பல்­வேறு தக­வல்கள் வெளி­யா­கி­ வருகின்றன.

குறித்த தாக்­கு­தலை நடத்த வந்­த­வரை தேவா­லய நிர்­வா­கத்­தினர் சந்­தேகம் கொண்டு வெளியில் அனுப்ப முற்­பட்­ட­போது அவர் வாய்த்­தர்க்­கத்தில் ஈடு­பட்­ட­தா­கவும் சம்­ப­வத்­தின்­போது பாதிக்கப்பட்­ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

தேவா­ல­யத்­திற்குள் நுழைய முற்­பட்­ட­வரை தேவா­லய ஊழி­யர்கள் தேவா­ல­யத்­திற்குள் இருந்­து­வெ­ளி­யேற்­றிய நிலையில் மீண்டும் அவர் தேவா­ல­யத்­திற்குள் நுழைய முற்­பட்ட வேளையில் அவர் ஊழி­யர்­க­ளுடன் வாக்­கு­வாதம் செய்­து­கொண்­டி­ருக்­கும்­போதே குண்டை வெடிக்­கச்­செய்­துள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

இதே­வேளை கொலை­யாளி மட்­டக்­க­ளப்பு மரியாள் பேராலயத்தினை இலக்­கு­வைத்தே வந்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

தாக்­குதல் நடந்த அன்­றைய தினம் காலை மரியாள் தேவாலயத்திற்கு முன்­பாக நின்ற இளை­ஞர்­க­ளிடம் குறித்த தேவால­யத்தில் ஆரா­தனை தொடர்பில் கேட்டதாகவும் அவர்கள் வழிபாடுகள் முடிந்துவிட்டது என்று கூற அங்கிருந்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.