விமான பயணிகளின் சேவையை வழங்குவதற்காக கொழும்பு கோட்டை வர்த்தக மத்திய நிலைய அலுவலகத்துக்கு மேலதிகமாக நாடு முழுவதிலும் நகரங்களில் உள்ள அலுவலகங்களின் சேவை 24 மணித்தியாலமும் இடம்பெறவுள்ளது.

இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கன் விமானம் அறிவித்துள்ளது.

விமான பயண சீட்டுகளை கொள்வனவு செய்தல் விமான பயணத்திற்கான நாளில் மாற்றத்தை மேற்கொள்ளுதல் ஆசன ஒதுக்கீது விமானம் புறப்படுதல் மற்றும் வரும் நேரங்கள் தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்ளுதல் முதலானவை இந்த அலுவலக சேவையில் இடம்பெறுகின்றன.

மட்டக்களப்பு கம்பஹா அம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் குருநாகல் வவுனியா வென்னப்புவ பேராதனை ஆகிய நகரங்களில் இந்த சேவை அலுவலகங்கள் செயல்ப்படுகின்றன.  இது தொடர்பான மேலதிக விபரங்களை 1979 என்ற தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு அறிந்துக்கொள்ள முடியும். www.srilankan.com என்ற இணையத்தளத்திலும் இது தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்ள முடியும்.

இதேவேளை சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க,  விமான பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் நான்கு மணித்தியாலயத்திற்கு முன்னர் விமான நிலையத்தை வந்தடையுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.