யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கில் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே குறித்த சோதணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிளப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதணை நடத்தினர்.
இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிலின் உரிமையாளர் வந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிலை சோதணையிட்ட பின்னர் உரிமையாளரிடம் மோட்டார் சைக்கிலை கையளித்துள்ளனர்.
மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதணை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்து கொண்டு சென்றுள்ளனர்.
இச் சோதணை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM