2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகி ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந் நிலையில் இந்த போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்ததுள்ளது. 

ஜோசன் ஹோல்டர் தலைமையிலான இந்த அணிக் குழாமில் பாபியன் ஆலென், டேரன் பிராவோ, கார்லஸ் பிரித்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், ஷனோன் கேப்ரியல், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், ஷாய் ஹோப், இவின் லீவிஸ், ஆஷ்லே நர்ஸ், நிகோலஸ் பூரன், கெமார் ரோச், ஆந்த்ரே ரஸ்செல், ஒஷானே தாமஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த அணிக் குழாமில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிடிகாட்டிவரும் ரஸ்செல் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

 

எனினும் பொல்லார்ட், சாமுவேல்ஸ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அத்துடன் விரலில் காயத்தால் அவதிப்படும் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேனும் அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.