உயிர்த்த ஞாயிறு அன்று கொழும்பில் இடம் பெற்ற குண்டுவெடிப்பில் இரத்­தி­ன­புரி பொது வைத்­தி­ய­சா­லையில் சிறுவர் மருத்­துவ பிரிவை அமைப்­ப­தற்கு நிதி­யு­தவி வழங்­கிய எலன் நுவிஸின் மனைவி மொனிக் குரோய்ன் ஹுட் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்­டலில் தங்­கி­யி­ருந்­த­போதே கடந்த ஞாயிற்­று­கி­ழமை  இடம்­பெற்ற குண்டு வெடிப்பில் எலன் நுவிஸின் மனைவி மொனிக் குரோய்ன் ஹுட் உயி­ரி­ழந்தார்.

இரத்­தி­ன­புரி பொது வைத்­தி­ய­சா­லையில் சிறுவர் மருத்­துவ பிரிவை அமைப்­ப­தற்கு எலன் நுவிஸ் பெருந்­தொ­கை­யான நிதி அன்­ப­ளிப்பு செய்தி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

எலன் நுவிஸின் மனைவி மொனிக் குரோய்ன் ஹுட்டின் இறுதிக்கிரியை நேற்­று­முன்­தினம் பொரளை பொது மயா­னத்தில் இடம்­பெற்­றது. 

இறுதிக்கிரி­யையில் இரத்­தி­ன­புரி பொது வைத்­தி­ய­சா­லையின் நிர்வா­கத்­தினர் உட்­பட இரத்­தி­ன­புரி பிர­தே­சத்­தி­லி­ருந்து பெருந்திரலானோர் கலந்து கொண்­டனர்.

இரத்­தி­ன­புரி பொது வைத்­தி­ய­சா­லையில் அமைக்­கப்­பட்ட சிறுவர் மருத்­துவ பிரிவை பார்­வை­யி­டு­வ­தற்­காக எலன் நுவிஸ் மற்றும் அவ­ரது மனைவி மொனிக் குரோய்ன் ஹுட் உட்பட அவரது பிள்ளைகள் சகிதம் அண்மையில் இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.