பொது மக்களை பதற்றமடைய வேண்டாமென பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமக்கு கிடைக்கும் தகவலுக்கமைய நாட்டில் சோதனை சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக பொலிஸார்  மேலும்  தெரிவித்துள்ளனர்.

எனவே நாட்டு மக்களை பதற்றமடையாது  இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே கொழும்பு மத்திய வங்கிக்கு அருகில் குண்டுவெடிப்பு இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள படையினர் மத்தியவங்கியின் பணியாளர்களை வங்கிகட்டிடத்திலிருந்து வெளியே செல்லவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய வங்கிக்கு அருகில் உள்ள வீதிகளில் போக்குவரத்தை அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.

அத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கருகிலும் சோதனை நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.