இலங்கையின் முதலாவது CarbonNeutral® காபன் வெளியீட்டு விளைவுகளற்ற) வெகுசன தொடர்பாடல்கள் நிறுவனமான PR Wire, பசுமை எரிசக்தி வெற்றியாளர்  (The Green Energy Champion - GEC) என்ற, இலங்கை பொதுமக்களுக்கான புதியதொரு போட்டியை ஆரம்பித்து வைப்பதற்காக சர்வதேச ரீதியில் அபிவிருத்தியில் வல்லுனர்களாகத் திகழும் Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) நிறுவனத்துடன் அண்மையில் பங்காளராக இணைந்துள்ளது. 

மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் உபயோகத்தை வெளிக்கொணரும் மிகச் சிறந்த திட்டத்தை இனங்காணும் வகையில் GEC போட்டி முன்னெடுக்கப்படுவதுடன், வெற்றியாளர்களுக்கு 30,000 யூரோ தொகை (அண்ணளவாக ரூபா 4.7 மில்லியன்) பரிசாக வழங்கப்படவுள்ளது.   

பரந்தளவில் சமூகத்திற்கு நன்மையளிக்கும் வகையில் எரிசக்தி திறனை மேம்படுத்தும் மற்றும்ஃஅல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டங்களை greenenergychampion.lk என்ற இணையத்தளத்தின் மூலமாக சமர்ப்பிக்குமாறு போட்டியாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். சமூக ஆதார அமைப்புக்கள், பாடசாலைகள், குடும்பங்களைக் கொண்ட குழுக்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் குழுக்கள், 2016  மே 31 இற்கு முதல் விண்ணப்பித்து, இதில் பங்குபற்றுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.  

இதற்கு மேலே ஒரு படி சென்று, ஒட்டுமொத்த போட்டியும் சுற்றுச்சூழலுக்கு தீங்கற்ற வகையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்யும் அர்ப்பணிப்பு உணர்வுடனான தீர்மானத்தை PR Wire மேற்கொண்டுள்ளதுடன், இதற்கு ஆதரவளிக்க GIZ நிறுவனமும் உற்சாகத்துடன் முன்வந்துள்ளது. இந்த வகையில் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் போட்டியின் ஆரம்ப நிகழ்வை ஒரு “CarbonNeutral® event” நிகழ்வாக மாற்றியமைத்து, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு The Carbon Consulting Company (CCC) உடன் கைகோர்த்துள்ளனர். 

இதற்கு ஐக்கிய இராச்சியத்தின் Natural Capital Partners அமைப்பின் சான்று அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. 

போட்டியின் விருதுகள் வழங்கும் நிகழ்வும் ஒரு CarbonNeutral® நிகழ்வாக ஏற்பாடு செய்யப்படவுள்ளதுடன், சர்வதேச சந்தையில் பதிவுசெய்யப்பட்ட, காபனை ஈடுசெய்யும் தாள்களை கொள்வனவு செய்வதன் மூலமாக, நிகழ்வின் மூலமாக வெளிவிடப்படுகின்ற பச்சை வீட்டு வாயு விளைவுகளைக் குறைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.   

இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான GIZ வதிவிட அலுவலகத்தின் வதிவிட கருமபீட அதிகாரியான டானியல் ஸ்கெர்ய்பெர் கருத்துத் தெரிவிக்கையில், 

“எரிசக்தி மற்றும் எரிசக்தி திறனின் சுத்தமான வடிவங்களின்  மேம்பாடுகள் தொடர்பில் தேடலில் ஈடுபடுகின்ற செயற்திட்மொன்று, தன் மூலமான காபன் வெளியீட்டு விளைவு தொடர்பில் கண்டிப்பாக அறிந்திருத்தல் வேண்டும். 

இதனாலேயே பசுமை எரிசக்தி வெற்றியாளர் போட்டியின் அமுலாக்க நிறுவனமான GIZ, தான் சொல்வதை, செயலில் காட்ட விரும்புகின்றது. 

நிலைபேற்றியல் வழியிலான நிகழ்வு முகாமைத்துவம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட, காபனை ஈடுசெய்யும் தாள்களை கொள்வனவு செய்தல் ஆகியவற்றின் மூலமாக இந்த பிரச்சாரம் மற்றும் போட்டியினால் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை முடிந்தளவு குறைந்துக்கொள்ள எமக்கு உதவுகின்றன”.