வாகன சோதனை நடவடிக்கைக்காக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க வீதியானது தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்தினுடைய வெளிப்புற வாகனத் தரப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையினால் அங்கு பதற்ற நிலையொன்றை உருவானது.

இதனையடுத்து அப் பகுதிக்கு முப்படையினர் மற்றும் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை  மேற்கொண்டிருந்தனர். இதன் பின்னர் குறித்த வாகனம் தொடர்பபான சோதனை முழுமையாக நிறைவடைந்த நிலையில் மீண்டும் விமான நிலையத்தின் நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

எனினும் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு செல்கின்ற வாகனங்கள் நீண்டதொரு சோதனையின் பின்னரே உள்ளே  அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.