போராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் நாட்டின் பலபாகங்களிலும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் குறித்த கவலையான தருணங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த தற்கொலை தாக்குதலையடுத்து தற்போதைய நிலைமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடிப்பட்டுள்ளது.

நாட்டின் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் இதுவரை சுமார் 359 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 48 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 40 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.