முல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கபட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் மாவட்ட பொதுவைத்தியசாலை  பஸ் நிலையம் போன்ற இடங்களில் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் மற்றும் பொலிசார் பாதுக்கப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

மேலும் குறித்த  அரச திணைக்களங்கள் வைத்தியசாலைகளுக்கு வரும் மக்களின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கபடுகின்றனர் .

திடீரென இராணுவம் குவிக்கப்பட்டு சோதனைகள் இடம்பெறுவதனால் மக்கள் மத்தியில் போருக்கு முந்திய காலங்களில் ஏற்பட்டத்தை போன்று  அச்சமானதொரு மனநிலை காணப்படுகின்றது . 

மேலும் இன்றையதினமும் முல்லைத்தீவில் உள்ள கடைகள் அனைத்தும் மூடபட்டு வெள்ளை மற்றும் கறுப்பு கொடிகள் கட்டபட்டு துக்கம் அனுஸ்டிக்கப்பட்டது  .இதனால் வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன .

நேற்றும் இன்றும் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில் 5 முஸ்லீம் நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.