இளம் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரரொருவர் பயிற்சியின்போது கீழே விழுந்து உயிரிழந்த துன்பியல் சம்பவமொன்று கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லுகன்யா டஸ்கி என்ற  22 வயது நிரம்பிய இளம் வீரரே இதயக்கோளாரறு காரணமாக திடீரென மயங்கி கீழே வீழ்ந்து உயிரிழந்தவராவார்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் பின்கோ நகம் கேப் டவுனில் கிரிக்கட் அக்கடமியொன்றை நடத்தி வருகிறார்.

குறித்த கிரிக்கெட் அக்கடமியில் உடற்தகுதி தேர்வுகள் இடம்பெற்று வந்தன. வழமையாக குறித்த தினம் அக்கடமியில் பயிற்சி இடம்பெற்றவேளையில் லுகான்யா டஸ்கி என்ற வீரர் திடீரென மயங்கி கீழே வீழ்ந்தார்.

உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவரை  கொண்டு சென்றபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். 

சம்பம் பற்றி கிரிக்கெட் அக்கடமியை நடத்தி வந்த பின்கோ நகம் தெரிவிக்கையில், 

அவர் நலமாகவே இருந்தார், அவருக்கு எந்தவொரு பிரச்சினையும் இருந்ததில்லை. அவர் உடற்தகுதி தேர்வின் ஒரு பகுதியை முடித்து விட்டு, தனது சேட்டை எடுத்துக்கொண்டு சக வீரர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென இருமிக்கொண்டே கீழே வீழ்ந்து விட்டார்.

நாங்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், இருப்பினும் தாமதம் ஆகிவிட்டது." 

மரணத்திற்கான காரணத்தை அறிய வேண்டியுள்ளது. அவருக்கு இதுவரை எந்த பிரச்சினைகளும் இருக்கவில்லை. அதற்குரிய எந்த அறிகுறியும் காணப்படவில்லை. அவருக்கு இதுவரையிலும் மூச்சுவிட முடியாது தவித்த எந்த இருதய கோளாறுகளோ இருந்ததில்லை. இருப்பினும் இதேபோன்றதொரு பிரச்சினை எதிர்காலத்தில் நடக்காது பார்த்துக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்தார்.