(செ.தேன்மொழி)

மாதம்பை பகுதியில் வீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, அவரிடம் தன்னை அடையாளப்படுத்துவதற்கான வீசா மற்றும் கடவூச்சீட்டுகள் இல்லாமல் இருந்துள்ளது.

சந்தேக நபர் அப்பகுதியில் அரபு பாடசாலையொன்றில் ஆசிரியராக கடமையாற்றியவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.