(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கும் அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் துக்கத்தினத்தை அனுஷ்டிக்குமாறே நான் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கூறினேன்,  அவர் அதனை திரிபுப்படுத்தி, கடைகளை மூடி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கும் இடையிலான தொடர்புகள் சம்பந்தமாக முக்கியமான கேள்விகள் எழுந்துள்ளது.

ஆகவே இந்த அமைப்புக்கும் அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். 

அத்துடன் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை, ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயற்பாடு எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.