கொம்மான்துரைக்கு மேற்கு பகுதி கடலில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 12 பேர் நேற்று கடற்படையினல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான படகொன்றின் மூலம் கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து 

நடவடிக்கையின் போது இவ்வாரு செல்லுப்படியாகும் உரிமங்கள் இல்லாமல் கடல் அட்டைகளை பிடித்த காரணத்தினால் இவர்களை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அங்கு ஒரு  படகு மற்றும் ஒரு வெழி எரி இயந்திரம் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்த நபர்கள் 24 மற்றும் 47 வயதுடைய மன்னார் சேர்ந்த நபர்கள் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின் தெரியவந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.