(ஆர்.யசி, எம். ஆர். எம்.வசீம்)

தற்போது இடம்பெற்றுள்ள தொடர்குண்டுத் தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமைகொராது இருந்திருந்தால் இன்று நாட்டில் பலர் மீது வீண்பழி சுமத்தப்பட்டிருக்கும் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்தை ஆயுதம் மூலமாக மட்டுமே இல்லாதொழிக்க முடியும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சபையில் இன்று தெரிவித்தார். 

அத்தடன் ஐ.எஸ் இன் நோக்கம் உலகம் முழுவதும் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. அவர்கள் நோக்கம் உலகத்தை மோசமாக அழிக்கவேண்டும் என்பதாகும். தாம் வழிபடும் மதம் அல்லாது ஏனையே மதத்தவரை கொன்று குவிக்க வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியுள்ளனர். 

இதனை நாம் பேச்சுவார்த்தை மூலமாக தடுக்க முடியாது. ஆயுதம் மூலமாகவே இதனை எம்மால் தடுக்க முடியும். விடுதலைப்புலிகளை அழித்தது போன்ற செயற்பாடு அல்ல இது. பிரபாகரனுடன், ஜே.வி.பியுடன் செய்த யுத்தமாக இதனை கருத கூடாது. ஆகவே இதற்காக எமது பாதுகாப்பு செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.