நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரூவான் குணசேர தெரிவித்துள்ளார். ஸ்ரீ

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 60 பேரில் 32 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடமும் 4 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடமும் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் எஞ்சிய சந்தேக நபர்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.