பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு செயாலளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோரை தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறித்த இருவரையும் கைது செய்யும்படி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.