சிவகார்த்திகேயன் பதிவு செய்த வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா? என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

“வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் சிவகார்த்திகேயன் வாக்களித்துள்ளார். விதி மீறி வாக்களித்திருந்தாலும் நடிகர் சிவகார்த்திகேயன் பதிவு செய்த வாக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். யாருக்கு வாக்களித்தார் என்பது தெரியாத போது ஒரு வாக்கை மட்டும் எண்ணாமல் விட முடியாது. வெற்றி தோல்வி குறித்து முடிவுகள் வெளியாகும் போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு பின்பற்றப்படும். 

சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் நீக்கப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளோம். 

அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மே 23 ஆம் திகதி வரை தலா ஒரு பறக்கும் படை செயல்படும். மதுரை விவகாரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இன்று அறிக்கை அனுப்பப்படும்.” என்றார்.