நவாலி பிரசாத் லேனில் உள்ள வீடொன்றில் இன்று நண்பகல் 16 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டன என்று வீட்டு உரிமையாளரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது.

வீட்டில் உள்ள தம்பதியினர் வெளியில் சென்றிருந்த வேளை பார்த்து இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு அண்மையாகவுள்ள பிரசாத் லெனில் இன்று நண்பகல் வேளை வீட்டிலுள்ள தம்பதியினர் வெளியில் சென்றிருந்தனர்.

அதனைப் பயன்படுத்தி வீட்டின் சமையல் அறையில் உள்ள சிறிய யன்னலின் ஊடாக வீட்டுக்குள் நுழைந்த திருடன், படுக்கை அறை அலுமாரியில் இருந்த தாலிக்கொடி உள்ளிட்ட சுமார் 16 தங்கப் பவுண் நகைகளைத் திருடிக் கொண்டு தப்பித்துள்ளார்.

வீடு திரும்பிய தம்பதியினர் அலுமாரியில் உள்ளவை சிதறியுள்ளன என்பதை அவதானித்து நகைகளைத் தேடிய போது அவற்றைக் காணவில்லை. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவ இடத்துக்கு இன்று மாலை சென்ற பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டனர்.