வொட்சனின் அசத்தலான ஆட்டத்துடன் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை அணி பிளேஒப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 41 ஆவது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு ஐதராபாத் அணியை பணிக்க, அதன்படி ஐதராபாத் அணி முதலாவதாக துடுப்பெடுத்தாட களமிறங்கி 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 175 ஓட்டங்களை குவித்தது.

176 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணியின் முதல் விக்கெட் 3 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது. அதன்படி டூப்பிளஸ்ஸி ஒரு ஓட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின் 2 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய சுரேஷ் ரய்னா வோட்சனுடன் இணைந்து அதிரடியாக துடுப்பெடுத்தாடினார். குறிப்பாக 6 ஆறவாது ஓவருக்காக சண்டீப் சர்மா பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரை எதிர்கொண்ட ரய்னா நான்கு 4 ஓட்டம், ஒரு ஆறு ஓட்டத்தை அந்த ஓவரில் விளாசித் தள்ளினார் (4 0 4 4 4 6). 

தொடர்ந்து சென்னை அணி 9 ஓவர்களின் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் 73 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் வோட்சன் 37 ஓட்டத்துடனும், ரய்னா 37 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடி வந்தனர். எனினும் 9 ஆவது ஓவரின்  இறுதிப் பந்தில் ரய்னா 38 ஓட்டத்துடன் ரஷித் கானின் சுழலில் சிக்கி ஆட்டமிந்தார்.

மூன்றாவது ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய அம்பத்தி ராயுடுவுடன் வோட்சன் கைகோர்த்து அதிரடி காட்ட 11.4 ஆவது ஓவரில் அவர் ஒரு ஆறு ஓட்டத்தை விளாசி மொத்தமாக 35 பந்துகளில் 3 ஆறு ஓட்டம், 5 நான்கு ஓட்டம் அடங்களாக அரைசதம் கடந்தார்.

அது மாத்திரமின்றி ஐதராபாத் அணியின் பந்துகள‍ை எதிர்கொண்டு வோட்சன் தொடர்ந்தும் வான வேடிக்கை காட்ட சென்னை அணி 16 ஓவர்களின் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 150 ஓட்டங்களை குவித்தது.

இந் நிலையில் மைதானத்தை தொடர்ந்தும் அதிர வைத்த வேட்சன் 17.1 ஓவரில் மொத்தமாக 53 பந்துகளில் 96 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்(160-3). 

வேட்சனின் வெளியேற்றத்தையடுத்து கேதர் யாதவ் களமிறங்கி துடுப்பெடுத்தாட சென்னை அணி 19.5 ஆவது ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஐதராபாத் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது. ஆடுகளத்தில் கேதர் யாதவ் 11 ஓட்டத்துடனும், பிராவோ எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான் மற்றும் புவனேஸ்வர் குமார் மற்றும் சண்டீப் சர்மா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.

இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் இத் தொடரில் முதல் அணியாக பிளேஒப் சுற்றுக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி ; ஐ.பி.எல். இணையத்தளம்