யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் நாளை 24 ஆம் திகதி இடம்பெறவிருந்த நேர்முகத்தேர்வுகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக வளாகத்தின் முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் பிரயோக பீடம் மற்றும் தொழில் நுட்பத்துறைக்கான  தற்காலிக விரிவுரையாளர்கள் மற்றும் செய்முறை காட்டுனருக்கான நேர்முகத்தெரிவுகள் நாளை 24 ஆம் திகதி இடம்பெறவிருந்தது.

எனினும் தவிர்க்கமுடியாத காரணங்களால் அவற்றை பிற்போட்டுள்ளதுடன் நேர்முகத்தெரிவுகள் இடம்பெறும் திகதி பின்னர் அவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.