வோர்னர் மற்றும் மனீஷ் பாண்டேயின் சிறந்த இணைப்பாட்டம் காரணமாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 175 ஓட்டங்களை குவித்துள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 41 ஆவது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு ஐதராபாத் அணியை பணிக்க, அதன்படி ஐதராபாத் அணி முதலாவதாக துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

டேவிட் வோர்னர் மற்றும் பெயர்ஸ்டோ ஐதராபாத் அணியின் ஆரம்ப வீரர்களாக கமளமிறங்கி துடுப்பெடுத்தாடியபோது இரண்டாவது ஓவரின் 3 ஆவது பந்து வீச்சில் பெயர்ஸ்டோ எதுவித ஓட்டமுமின்றி ஹர்பஜன் சிங்கின் சுழலில் சிக்கி தோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார் (5-1).

 2 ஆவது விக்கெட்டுக்காக மனீஷ் பாண்டே மற்றும் டேவிட் வோர்னர் கைகோர்த்து அதிரடிகாட்ட ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி ஓட்டங்களை குவித்தது.

அதன்படி முதல் 5 ஓவரில் 43 ஓட்டத்தையும், 10 ஆவது ஓவரில் 91 ஓட்டங்களையும், 12 ஆவது ஓவரின் முடிவில் 108 ஓட்டங்களையும் குவித்ததுடன், வோர்னர் 51 ஓட்டத்துடனும், மனீஷ் பாண்டே 54 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

எனினும் 13 ஆவது ஓவரின் 3 ஆவது பந்து வீச்சில் டேவிட் வோர்னர் மொத்தமாக 45 பந்துகளை எதிர்கொண்டு 2 ஆறு ஓட்டம், 3 நான்கு ஓட்டம் அடங்களாக 57 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து விஜய் சங்கர் களமிறங்கி மனீஷ் பாண்டேயுடன் கைகோர்த்தாட ஐதராபாத் அணி 15 ஓவர்களின் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது.

இந் நிலையில் 18 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் விஜய் சங்கர் 26 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, யூசப் கான் களமிறங்கிானர். இறுதியாக ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை குவத்தது.

ஆடுகளத்தில் அதிரடியாக ஆடிய மனீஷ் பாண்டே 49 பந்துகளில் 3 ஆறு ஒட்டம் 7 நான்கு ஓட்டம் அடங்களாக 83 ஓட்டத்துடனும், யூசப் கான் 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுக்களையும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்