(ஆர்.விதூஷா)

நீரில் விஷம் கலந்துள்ளதாக மக்கள் மத்தியில் பொய்யான வதந்தியை பரப்பியமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளுக்கு அமைய சந்தேக நபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்திற்கு அமைய பொய்யாக வதந்தியை பரப்பிய குற்றத்திற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மாதம்பிட்டிய -கொழும்பு -15 பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதுடன், இருவரையும் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தியதையடுத்து நீதவானர் அவர்களை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்.