12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 41 ஆவது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு ஐதராபாத் அணியை பணித்துள்ளது. அதன்படி ஐதராபாத் அணி முதலாவதாக துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வோட்சன், டூப்பிளஸ்ஸி, சுரேஷ் ரய்னா, ராயுடு, கேதர் யாதவ், பிராவோ, ஜடேஜா, தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாகீர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

புவனேஸ்வர் குமார் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணியில் டேவிட் வோர்னர், பெயர்ஸ்டோ, விஜய் சங்கர், தீபக் ஹுடா, யூசுப் பத்தான், ரஷித் கான், , ஷாபாஸ் நதீம், சண்டீப் சர்மா, கலில் அஹமட் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இப் போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாடாத காரணத்தினால் தலைமைப் பொறுப்பு மீண்டும் புவனேஸ்வர் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.