(ஆர்.விதூஷா)

அம்பாறையில் சந்தேகநத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று  தொடர்பில் குண்டை  செயலிழக்க  செய்யும் பிரிவினருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலுக்கு  அமைய  குறித்த மோட்டார் சைக்கிள்  சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.  

சோதனையின் நிறைவில் மோட்டார் சைக்கிளில் எவ்வித வெடி பொருட்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந் நிலையில் மழை காரணமாக கல்முனை செல்வதற்காக தான் மோட்டார் சைக்கிளை குறித்த இடத்தில் நிறுத்திவிட்டு சென்றதாக உரிமையhளர்  குறித்த  மொட்டார் சைக்கிளை  நிறுத்தி  விட்டு சென்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.