யாழ்.வடமராட்சி மாலுசந்திப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்கு  கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எந்த பொருளும் அகப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர். 

இன்று  பகல் மாலுசந்திப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய பொலிசார், இராணுவத்தினர் இணைந்து மாலுசந்தியின் நான்கு வீதிப் பக்கமும் சுமார் 200 மீற்றர் வரையான பகுதிகள் சோதனையிடப்பட்டன.

இதில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொருள் எவையும் இருக்கவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.