நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டொன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அப் பகுதியில் குண்டை செயலிழக்கச் செய்யும் பிரிவினர் அப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வ‍ெடி குண்டு இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, அப் பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தும்  நடவடிக்க‍ை எடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவிடம் வினவியபோது, கிங்ஸ்பெரி ஹோட்டலுக்கு அருகில் வெடிகுண்டு இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய குண்டை செயலிழக்கச் செய்யும் படையினர், கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் சந்தேகத்திற்கிடமான முறையில் எவ்வித பொருட்களும் இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு எமது இணையத்தளத்திற்கு தெரிவத்துள்ளது.