(செ.தேன்மொழி)

கொள்ளுபிட்டிய பகுதியில் சட்டவிரோதமான மதுபானத்துடன் சீன நாட்டுப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, 44 வயதுடைய சீன நாட்டு பெணணொருவர் கைது செய்யப்பட்டள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது பொலிஸார் இவரிடமிருந்து 74 சட்ட விரோத மதுபான போத்தல்களை மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.