கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மரணமடைந்தவர்களுடைய  இறுதிச்சடங்கு இன்று  கட்டுவபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்றது.

பிசப் மெல்கம் ரஞ்சித் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை நடத்தி வைத்தார். இறந்தவர்களுடைய குடும்ப அங்கத்தவர்கள் கத்தோலிக்க மதத் தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பின்னர் குடும்ப அங்கத்தவர்கள் தத்தமது பிரதேசங்களில் உள்ள சேமக்காலைகளில் இறந்தவர்களுடைய பிரேதங்களை நல்லடக்கம் செய்வதற்காக கொண்டு சென்றனர்.