சட்ட விரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்த முடியும் என்ற சந்தேத்தில் மேலும் சில வாகனங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். 

இதனிடையே ஐந்து மோட்டார் சைக்கிள்கள், கெப் ரக வாகனம் மற்றும் வேன் ஒன்று தொடர்பில் அதன் பதிவு இலக்கங்களுடன் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும், வேன் ஒன்றும் தொடர்பில் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தகவல் கிடைத்துள்ளதையடுத்து, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அந்த தகவலை கொழும்பின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.