வடக்கில் 30 வருட கால யுத்தத்தில் குறிப்பாக இறுதி யுத்தத்திலும் உயிரிழந்தவர்களுக்காக வட மாகாணத்தில் பல இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இறுதி யுதத்தில் உயிரிழந்தவர்களுக்காக யாழ். நல்லூர் ஆலயம் மற்றும் யாழ். பெரிய தேவாலயம் ஆகியவற்றில் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
 
மேலும் யாழ்.பல்கலைக்கழகத்திலும் இறுதிப்போரில் உயிரிழந்தவர்களுக்காக பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது அஞ்சலி செலுத்தியவர்களை புலனாய்வாளர்கள் கண்காணித்ததோடு  புகைப்படங்களையும் எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.