பயங்கரவாதத்தை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு அதிகாரம் வேண்டும்

23 Apr, 2019 | 03:28 PM
image

நாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின்  சிறிது காலமேனும் அவசரகால நிலைமைகளை அமுல்ப்படுத்த வேண்டும் , அதேபோல் இராணுவத்திற்கு  உடனடியாக அதிகாரங்களை கொண்டுத்து விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென  இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக தெரிவித்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புபட்ட குழு சிறிய குழுவாக இருந்தாலும் இவர்களுக்கு சர்வதேச பயங்கரவாத தொடர்புகள் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இராணுவத் தளபதி  மகேஷ் சேனாநாயக நேற்று கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். நேற்று முன்தினம் இடம்பெற்ற தொடர்குண்டுன் வெடிப்பு சம்பவம்  பலியாகிய பொதுமக்கள் குறித்தும் தமது அனுதாபங்களை இராணுவத்தளபதி தெரிவித்ததுடன் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில். இன்று நாட்டில் உள்ள சட்ட நகர்வுகளுக்கு அமைய இலங்கை இராணுவத்திற்கு இந்த சட்ட விதிமுறைகளுக்குள் செயற்பட முடியாத நிலைமையே உள்ளது. பொலிஸ் நடத்தும் விசாரணைகளுக்கு அப்பால் எமக்கும் விசாரணைகளை நடத்த, பரிசோதனை செய்யும் அதிகாரம் இந்த ஒருசில தினங்களுக்காவது  வழங்கப்பட  வேண்டும். அதேபோல் புலனாய்வு தகவல்களில் சில குறைபாடுகள் இடம்பெற்றுள்ளது. அதுவும் இந்த சம்பவம் இடம்பெற்ற காரணமாக உள்ளது என்பதை ஏற்றுகொள்ள வேண்டும். அதேபோல் இந்த சம்பவம் குறித்து இராணுவம் அறிந்திருக்கவில்லை. பொலிசார் இதுகுறித்து அறிந்துள்ளனர். அதேபோல் வநாத்தவில் சம்பவத்துடன் தொடர்புடைய செயற்பாடே இந்த  தொடர் குண்டுவெடிப்பு என்பதும் உண்மை. இதன்போது பாதுகாப்புப்படை என்ற வகையில் அனைவரும் இணைந்து இந்த செயற்பாட்டை கையாளாது போனமையே நெருக்கடியாக அமைந்தது. இராணுவத்தளபதி என்ற வகையில் எனது கருத்து என்னவென்றால் தற்காலிகமாக சிறிது காலத்திற்கு என்றாலும் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல் சந்தேக நபர்களை கைதுசெய்யும் அதிகாரமும் எமக்கு வழங்கப்பட வேண்டும். வேறு எவரதும் தலையீடுகள் ஏற்பட முன்னர் எமக்கு சந்தேக நபர்களை கைதுசெய்யும் அதிகாரம் தற்காலிகமாகவேணும் வழங்கப்பட வேண்டும். எமக்கு அதிகாரம் இல்லாமையும் எமக்கு கிடைக்கும் தகவலை நாம் வேறு ஒருவருக்கு பகிரவேண்டிய நிலைமை உள்ளது அவர்கள் தான் இதனை செய்ய வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு இருக்கின்றமையே  இதற்குக் காரணமாகும். அதேபோல் இந்த தொடர்குண்டு வெடிப்புடன் தொடர்புபட்ட குழு ஒரு சிறிய குழுவாக இருந்தாலும் கூட இவர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புபட்டுள்ளனர் என்பதை மறுக்கமுடியாது. இவர்கள் பயன்படுத்திய வெடிபொருட்கள் குறித்து பார்க்கையில் இவர்கள் இங்கேயே பயிற்ச்சிகளை பெற்றிருக்கவும் வாய்ப்புள்ளது. இவர்களுக்கான நிதி உதவிகள் சர்வதேசத்திடம் இருந்து கிடைத்திருக்கும் என்ற வாய்ப்புகள் உள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபெரி முன்மாதிரி கிராமம்...

2024-05-29 10:24:11
news-image

இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை பாதிக்கப்பட்ட சமூகங்களின்...

2024-05-29 10:11:30
news-image

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-05-29 10:10:35
news-image

மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில்...

2024-05-29 10:11:29
news-image

கற்பிட்டியில் திமிங்கல வாந்தியுடன் இரு மீனவர்கள்...

2024-05-29 10:07:37
news-image

வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி பணிகள்...

2024-05-29 09:23:19
news-image

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்...

2024-05-29 09:19:38
news-image

இன்றைய வானிலை

2024-05-29 06:14:11
news-image

ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் பிற்போடும்...

2024-05-29 05:45:55
news-image

பட்டமளிப்பு விழாவை பிற்போடுவது இளங்கலை மாணவர்களின்...

2024-05-29 01:44:39
news-image

கண்டியில் பிரபல வர்த்தகர் ஒருவர் 20...

2024-05-29 01:41:06
news-image

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20...

2024-05-29 01:29:28