வெளிநாட்டுத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றுமோர் 30 ஆண்டுகால யுத்தத்துக்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பு மற்றும் புற பகுதிகளில் இடம்பெற்ற தொடர்  குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து நாட்டில் நிலவும் அச்ச சூழல் குறித்து விவாதிப்பதற்காக விசேட பாராளுமன்ற அமர்வுக்காக சபை இன்று ஒரு மணியளவில் கூடியது.

இந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமெரிக்க, ஜப்பான், சீனா, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் பாகிஸ்தான் உட்பட்ட பல நாடுகளின் தலைவர்கள் என்னுடன் பேசினார்கள். அவர்களின் உதவியுடன் நாம் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். 

இந்த நேரத்தில் நாம் அரசியல் செய்யாமல் நாட்டை பாதுகாக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மேலே வரும்போது அதனை சீர்குலைக்க இந்த முயற்சி நடந்துள்ளது. 

அத்துடன் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இவ்வாறான சம்பவங்களை எதிர்ப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.