(இராஜதுரை ஹஷான்)

விடுதலை புலிகளின் காலத்தில் கூட இவ்வாறான மிலேட்சதனமான  கொடுமைகள் இடம்பெறவில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுதாக்குதல் முழு பொறுப்பினையும் அரசாங்கம் ஏற்று ஆட்சி மாற்றத்தை  ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுன முன்னயின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொலிஸ் மா அதிபரை குற்றவாளியாக்கி ஏனையோர் தப்பித்துக் கொள்ள இடமளிக்க முடியாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.