நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்களை பொலிசார் கடும் எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர். 

சுன்னாகம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் கடமையாற்றும் இரு இனங்களை சேர்ந்த இளைஞர்கள் இருவர் குண்டு வெடிப்பு தொடர்பில் கருத்து முரண்பட்டு , வாய் தர்கத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஒரு கட்டத்தில் வாய் தர்க்கம் கைக்கலப்பாக மாறி அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பில் கடை உரிமையாளரால் சுன்னாகம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பொலிஸ் நிலையத்தில் இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் , கடுமையாக இருவரையும் எச்சரித்து விடுவித்தனர்.