மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பிரதேச கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

நாவலடி சுனாமி நினைவு தூபிக்கு அருகாமையில் உள்ள கடற்கரையிலே உருக்குலைந்த நிலையில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது

இவ்வாறு மீட்கப்பட் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளது 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்