யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த வாகனம்

Published By: Digital Desk 4

23 Apr, 2019 | 11:52 AM
image

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் மதிலை உடைத்துக் கொண்டு வாகனம் ஒன்று உட்புகுந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் இது சாதாரண விபத்து என தெரியவந்ததை அடுத்து பதற்ற நிலை தணிந்துள்ளது.

நீதிபதி கடமைக்கு செல்லும் நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ். கச்சேரி – நல்லூர் வீதியில் அமைந்துள்ள நீதிபதியின் இல்லத்துக்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து  இடம்பெற்றது.

வேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நீதிபதியின் இல்ல வாயில் கதவுடன் மோதியது. இதில் நீதிபதியின் இல்ல வாயில், அருகிலுள்ள வீட்டு மதில் ஆகியவை இதனால் உடைந்து சேதமாயின. அப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றும் முறிந்தது.

சம்பவத்தையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த பொலிஸார் வாகனத்தை தீவிர சோதனை செய்தனார்.

வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38