இலங்கை குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்துவிட்டேன் - டென்மார்க் தொழிலதிபர்

Published By: Digital Desk 4

23 Apr, 2019 | 11:41 AM
image

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு விடுமுறையை கழிக்க  தன் குழந்தைகளுடன் கொழும்பு வந்த டென்மார்க் நாட்டின் தொழிலதிபர் ஒருவர் குண்டுவெடிப்பில் தன் 3 குழந்தைகளை இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

டென்மார்க் நாட்டின் தொழிலதிபர் ஆன்ட்ரசன் ஹாவல்க் பாவல்சன் (வயது 46). இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர் போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலின்படி டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரர் ஆவார். பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ள அவரின் சொத்து மதிப்பு சுமார் 50 ஆயிரம் கோடிகளாகும்

இவர் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்து இருந்த போது  இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் ஆன்ட்ரசனின் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தகவலை ஆண்ட்ரசனுக்கு சொந்தமான பாவன்சன்’ஸ் பே‌ஷன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார். குடும்பத்தினர் தனிப்பட்ட சுதந்திரம் கருதி வேறு எந்தத் தகவலும் தெரிவிக்க முடியாது. அவர்களின் உணர்வுகளுக்கு ஊடகங்கள் மரியாதை கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தைகளின் பெயர் விவரம் அளிக்கப்படவில்லை.

‘இலங்கை ஓர் அழகான நாடு. இந்த ஈஸ்டர் விடுமுறையை அங்கு கழிக்கலாம்’ என்று தன் குழந்தைகளிடம் கூறி கொழும்புக்கு சுற்றுலா அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில் குழந்தைகளை பறி கொடுத்துவிட்டு கண்ணீர் மல்க நிற்கிறார்.

குண்டு வெடிப்புக்கு 3 குழந்தைகளை பறி கொடுத்த ஆன்ட்ரசனுக்கு ஸ்காட்லாந்து நாட்டில் 2 இலட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1 சதவிகிதம் நிலம் அவருக்கு சொந்தமாக உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் அதிக அளவில் நிலம் சொந்தமாக வைத்திருப்பவர்களில் இவருக்கு இரண்டாவது இடம். இது தவிர 12 பெரிய தோட்டங்களும் உள்ளன. பெண்கள் உடையான வேரோ மோடா, ஜேக் போன்றவை ஆன்டர்சனுக்குச் சொந்தமான ‘பெஸ்ட் செல்லர்’ நிறுவனத்தின் தயாரிப்புகளில் முக்கியமானவை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17