12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 41 ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

பெங்களூருவுக்கு எதிராக ஒரு ஓட்டத்தில் தோல்வியுற்ற அதிர்ச்சியில் இருந்து மீண்டு சென்னை அணி தனது வெற்றி நடையை தொடரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னையில் அணியில் செயலிழந்த தொடக்க வரிசையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றில் நுழைந்து விடும் சென்னை.

தோனி அதிரடியாக ஆடியும் எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்தது. வோட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரய்னா போன்றவர்கள் வழக்கமான ஆட்டத்தை ஆடவில்லை. 

ஹைதராபாத் அணியில் தொடக்க வரிசை வீரர்கள் டேவில் வோர்னர் பெயர்ஸ்டோவ் மட்டுமே சிறப்பான ஆரம்பத்த‍ை வெளிப்படுத்தி வருகின்னர். 

இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் வோர்னர் 517 ஓட்டங்களையும், பெயர்ஸ்டோ 445 ஓட்டங்களையும்  குவித்துள்ளனர். இந் நிலையில் மத்தியதர துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்காதது அந்த அணிக்கு பெரும் இழப்பாகவுள்ளது.