கொழும்பை அண்டிய பகுதிகளில் பொலிஸாரால் சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொதி ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பொதியை பொலிஸார் சேதனையிட்டு வருவதால்  கரையோர ரயில் சேவையில் தாமதமேற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.