தனியார் மருத்­துவம், கல்வி மற்றும் தொலை­பே­சிக்­கட்­டணம் ஆகி­ய­வற்­றுக்­கான வற் வரி மே மாதம் 3ஆம் திகதி முதல் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. எனவே தனியார் பஸ் போக்­கு­வ­ரத்து கட்­ட­ணங்­க­ளையும் அதி­க­ரிக்க நேரி­டுமா என்­பது தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ள­தாக தனியார் போக்­கு­வ­ரத்து சங்­கத்தின் தலைவர் கெமுனு விஜ­ய­ரத்ன தெரி­வித்தார்.

வற் வரி அதி­க­ரிக்­கப்­ப­டு­மாயின் தனியார் பஸ் போக்­கு­வ­ரத்து கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்பு ஏற்­ப­டுமா என்ற கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கருத்து கூறினார்.

அவர் தொடர்ந்து குறிப்­பி­டு­கையில்,

எதிர்­வரும் மே மாதம் 2ஆம் திகதி முதல் வற் வரி விகிப்­படும் என தற்­போது அர­சாங்­கத்­தினால் உறு­தி­யாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் குறித்த வரி அதி­க­ரிப்பு கார­ண­மாக தனியார் மற்றும் அர­சத்­துறை சார் பல நிறு­வ­னங்­களும் பொருட்­களின் விலை அதி­க­ரிப்பு தொடர்­பாக கவனம் செலுத்தி வரு­கின்­றன. இதன்­படி தற்­போது தனியார் பஸ் கட்­ட­ணங்­களும் அதி­க­ரிக்­கப்­ப­டுமா என்ற கேள்வி நில­வு­கின்­றது.

ஆயினும் தனியார் பஸ் போக்­கு­வ­ரத்து கட்­ட­ணங்­க­ளையும் அதி­க­ரிக்க நேரி­டுமா என்­பது தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்ளோம். எனினும் இது­வரை நாம் எவ்­வி­த­மான தீர்க்­க­மான முடி­வு­களும் மேற்­கொள்­ள­வில்லை. அரச அதி­கா­ரி­க­ளு­டனும் பஸ் கட்­டண அதி­க­ரிப்பு தொடர்­பான நிய­மக்­கோ­வை­க­ளி­ன­டிப்­ப­டையில் குறித்த பேச்­சு­வார்த்­தை­க­ளையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

இது தொடர்பான இறுதி தீர்மானங்களை அடுத்த வாரத்தின் முதற்காலப்பகுதியில் மேற்கொள்ள உத்தேசித்துள்ளோம்.அதன்பின்னர் எமது சங்கம் இறுதியான முடிவினை அறிவிக்கும் என்றார்.