நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 4 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 4 மணிவரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.