ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 40 ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு 8.00 மணிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே ஜெய்ப்பூரில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய ராஜஸ்தான் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை குவித்தது.

192 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த டெல்லி அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து ராஜஸ்தான் நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

டெல்லி அணி சார்பில் தவான் 54 ஓட்டத்துடனும், ஸ்ரேயஸ் அய்யர் 4 ஓட்டத்துடனும், பிரித்வி ஷா 42 ஓட்டத்துடனும், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 11 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், அணியின் வெற்றிக்கு அதிரடியா துடுப்பெடுத்தாடி ரிஷாத் பந்த் மொத்தமாக 36 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டம் அடங்களாக 78 ஓட்டத்துடனும், கொலின் இங்ரம் 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் ஸ்ரேயஸ் கோபால் 2 விக்கெட்டுக்களையும், குல்கரனி, ரியான் பாரக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

நன்றி ; ஐ.பி.எல். இணையத்தளம்