பிலிப்பைன்ஸில் இன்று இடம்பெற்ற சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

பிலிப்பைன்சின் மணில நகரின் வட‍ மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேஸ்டில்லெஜோஸ் என்ற பகுதியிலேயே இந்த நிலக்கம் ஏற்பட்டுள்ளது.

6.4 ரிக்டர் அளவில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்கள், வீடுகள் குலங்கியதுடன் அங்கு பணிபுரிந்து வந்த அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் என ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந்து அலறியத்து ஓடினர்.

கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் அதில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  

அவர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.