(ஆர்.விதுஷா)

தெமட்டகொட பகுதியில் சோதனை நடவடிக்கையின் போது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவுக்கமையவே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய உபபொலிஸ் பரிசோதகர் எவ்.எம்.ரோஹன பண்டார பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். அத்தடன் பொலிஸ் கான்ஸ்டபிள்களான ஆர்.ஆர்.எம். ஹதிய ரத்நாயக்க பண்டார, எச்.எவ்.லகிரு உமேஸ் துலக்ஷன் ஆகியோர் சார்ஜன் பதவிக்கும் உயர்த்தப்பட்டுள்ளனர்.