வத்தளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றை பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

வத்தளை மாபாகே பகுதியிலுள்ள நவலோக மைதானத்தின் அருகிலேயே குறித்த  சந்தேகத்திற்கிடமான வேனொன்று பரிசோதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார்  மேலும் தெரிவித்துள்ளனர்

இதனையடுத்து குறித்த சம்பவத்தால் கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.