நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளையடுத்து கிளிநொச்சி மாவட்டத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் இராணுவனத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதோடு,  கிளிநொச்சி ஏ9 வீதியில்   ஆயுதம் தாங்கிய பொலிஸார்  சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டுள்ளனர்.

அத்தோடு தேவாலயங்கள் உள்ளிட்ட பொது  இடங்களில் பொது மக்கள் கூட்டமாக ஒன்று கூடி நிகழ்வுகளை நடாத்த வேண்டாம் எனவும் பொலீஸார் அறிவித்துள்ளனர்.