நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில், அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி ஒப்பந்தமாகியிருக்கிறார்.

பிக் பொஸ் மற்றும் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் அடுத்ததாக அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ‘தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். 

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தொலைக்காட்சி தொகுப்பாளினியும்,  தெலுங்கு, கன்னட மற்றும் பொலிவுட் படங்களில் நடித்து பிரபலமான பொலிவுட் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். 

இதுகுறித்து படத்தின் இயக்குநர் சஞ்சய் பாரதி தெரிவிக்கையில் ,“சோதிடம் சம்பந்தப்பட்ட இந்தக் கதைக்கு புதுமுகம் ஒருவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று விருப்பப்பட்டேன். பலரிடம் பாவனை சோதனையை மேற்கொண்டோம். இறுதியில் ரியா சக்கரவர்த்தி கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவராக இருந்தால்,  தெரிவு செய்து, நாயகியாக அறிமுகப்படுத்துகிறோம்.” என்றார். 

இந்த படத்தின் படப்பிடிப்பும், தொடக்க விழாவும் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் சஞ்சய் பாரதி மூத்த இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் வாரிசு என்பதும். இவர் இயக்குநர் ஏ எல் விஜயிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.