வத்தளை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வத்தளை எந்தேரமுல்ல வீதியில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீட்டிலிருந்தே குறித்த இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நேற்று கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.